வேலை வாய்ப்பு பயிற்சி அறிக்கை {INTERNSHIP REPORT}-இளந்தளிர் சமுதாய வானொலி 20-DEC-2011-20-JAN-2012

இளந்தளிர் சமுதாய வானொலி தேர்வு செய்ததற்கான காரணம் :

நான் சமூகத்தில் ஒருவன் , இந்த சமூகம் சமூகத்தில் உள்ள மக்களால் ஆனது , ஆக நான் எந்த அளவிற்கு இந்த சமூகத்தில் பங்கு கொள்கிறேன் ,
இந்த சமூகம் எனக்கு கூறுவது என்ன ?
 நான் இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டியது என்ன ?
நம் சமூகம் வேண்டுவது எதை ?
வேண்டுவது கிடைத்தால் ஏற்படும் மாற்றம் என்ன ?
ஏன் மாற்றம் ஏற்பட வேண்டும் ?
இவ்வாறான பல புரிதல்களை வேண்டியே இந்த இளந்தளிர் சமுதாய வானொலியை தேர்வு செய்தேன் ..
காரணம் ஊடகங்கள் ஒன்றே சமூக நெருக்கம் கொண்டது ..
குறிப்பாக 30 வருடங்களுக்கு முன்பு வானொலி மக்களின் வாழ்வை ப்ரதிபளிக்க கூடியதாக இருந்தது ...
இன்று ஊடகங்களில் ஏற்பட்ட வினோத புரட்சிகளின் காரணங்களால் பல மாற்றங்களை நாம் சந்தித்து விட்டோம் ...
அவ்வாறு ஏற்பட்ட மாற்றங்களினால்  சமுதாயத்தில் முளைத்த நல்வினை தீவினை அனைத்தும் நாம் அறிந்ததே
மற்றும் இவ்வானொலியானது மத்திய அரசின் பார்வையில் இயங்கிகொண்டு இருக்கும் வானொலி , அரசு ஒன்றே பாமர மக்களுக்கும் ,வறுமை கோட்டில் வாழ்பவர்களுக்கும் அதிக பிணைப்பு கொண்டதாக இருக்கும் ,இதனோடு சேவை மனப்பான்மையும் உயரிய தரத்துடன் இயங்கி கொண்டு இருப்பதை அறிந்து இந்த இளந்தளிர் சமுதாய வானொலியை தேர்வு செய்தேன் . 

இளந்தளிர் சமுதாய வானொலியில் எனது பயிற்சிகாலம் (20\12\2011 முதல்  20\1\2012 வரை) 

19\12\2011 அறிமுகம் :

இன்று காலை இந்த இளந்தளிர் சமுதாய வானொலி பற்றியும் அதன் துவக்க பின்னணி குறித்தும் என்னிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது .. அதை தொடர்ந்து இவ்வானொலியின்  உருவாக்கம் ,முழு அமைப்பு,இதன் பணிகள் ,கடமைகள் ,உடன் உதவி புரியும் அமைப்புகள் அதன் அமைப்பு ஒட்டு மொத்த அமைப்புகளின் இலக்கு போன்ற பல தகவல்கள் எனக்கு வழங்கப்பட்டது 
ICDS-  Integrated Child Development Services குறித்தும்

RGNIYD -  Rajiv Gandhi National Institute of Youth Development
(ராஜீவ் காந்தி தேசிய இளைஞ்சர் மேம்பாட்டு நிறுவனம் )

இந்நிறுவனத்தின் கீழ் இயங்கப்பட்டு வருவதே இளந்தளிர் சமுதாய வானொலி .
வானொலியை அறியும் பொருட்டு அதன் அமைப்பை அறியவும்  இந்நிறுவனத்தில் கடைபிடிக்க படும் T O E என்று அழைக்க கூடிய 5 துறைகளை பற்றி விளக்கபட்டது ..
  • coordinating Training,
  • Orientation,
  • Research,
  • Extension and
  • Outreach initiatives for State,Central Governments
  • national level youth organizations.
இவ்வாறான ஒரு தொடர் செய்முறையை அடிப்படையாக கொண்டே இந்த நிறுவனம் செயல்பட்டுக்கொண்டு உள்ளது  .
NYKS,NSS போன்ற அமைப்புகளும் இந்நிறுவனத்திற்கு உதவியாக உள்ளது .
HIV,சமூக ப்ரச்சனைகள் ,விழிப்புணர்வு அதற்கான பயிற்சி வகுப்புகள் , போன்றவைகள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன .
READ
PRIYA
SHANS
ICEYD
AHDP
இவ்வாறான பிரிவுகள் இந்நிறுவனத்தில் அங்கமாக உள்ளது .மேற்கண்ட சமூகம் சார்ந்த பிரிவுகளுக்காக இந்நிறுவனம் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது ..மற்றும்
  • CAREER GUIDANCE
  • CORE LIFE SKILL TRAINING
  • CAPACITY BUILDING
  • COMMUNITY INTERVENTION
  • INSTITUTIONAL STRENGTHENING
போன்ற பயனுள்ள வழிகாட்டுதல்கள் இதன் மூலம் வழங்கபடுகின்றது ,இவ்வாறான வழிநடத்துதல்கள்  இளைஞ்சர்களுக்காகவும் , சமூகத்தில் உள்ள மக்களுக்காகவும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞ்சர் மேம்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்றது .

இளந்தளிர் சமுதாய வானொலி 107.20MHz

இளந்தளிர் ஒரு சமுதாய வானொலி இதில் சமூகத்தினரது பங்கு அதிகம் என்றே கூறலாம் .
இளந்தளிர் சமுதாய வானொலியானது சமூகத்தை கொண்டு சமூகத்திற்காக சமூகத்தால் நடத்தபடும் வானொலியாகும்
குறிப்பிட்ட சமூக மக்களை தேர்வு செய்து அவர்களை மேம்படுத்தவே இவ்வானொலி .
பொது மக்களுக்காக அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் ,தகவல்கள்,வழங்கப்படுகின்றது அது சுற்றுசூழல் ,
உடல் ஆரோக்கியம்,வேலை,கல்வி போன்ற பல தகவல்களை அந்த சமூக மக்களுக்கு வழங்க மத்திய அரசால் துவங்கப்பட்டதே இந்த இளந்தளிர் சமுதாய வானொலி
2008 இல் குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று இந்த வானொலி காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர்ல் துவங்கப்பட்டது .
இவ்வூரை சுற்றயுள்ள கிராமங்களில் சுமார் 18 முதல்  20 கீ மீ  வரையில் இவ்வானொலி ஒளிபரப்பாகின்றது .இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களிலும் கேட்க முடியும் அதாகப்பட்டது 58 கிராம பஞ்சாயத்துகளில் 48 பஞ்சாயத்துகளில்  இவ்வானொலியை கேட்கலாம் . இவ்வானொலி ஆனது வளர் இளம் பருவத்தினருக்காக வளர் இளம் பருவத்தினரால் நடத்தப்படுகின்றது  .
ஒளிபரப்பும் நேரம் :
காலை 10.00 மணி  முதல்  மாலை  06.00 மணி  வரை
 10 வயது முதல் 19 வதிற்குட்பட்டவர்களை  கொண்டு வாழ்வியல் திறன்களை அடிப்படையாகவும் ,சமூக விழிப்புணர்வு வேண்டியும் ,செய்திகள் ,பொதுஅறிவு ,வேலை போன்றவற்றில் வளரும் மாணவர்களை மேம்படுத்தவும் அப்பகுதி மாணவர்களுக்கு  பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களால்  நிகழ்சிகள் நடத்தபடுகின்றது. 40 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இவ்வானொலி ஒளிபரப்பப்படுகிட்றது .
இது தவிர பள்ளி வாழ்வை தொடராதவர்களுக்கும் வழிகாட்டுதல்கள் இந்நிறுவனத்தால் வானொலியை கொண்டு வழங்கப்படுகின்றது.
அது மட்டிள்ளல்லாது விழிப்புணர்வு முகாம் , பயிற்சிவகுப்புகள் என பல்வேறு விதமான பணிகளையும் புரிந்து வருகின்றது

வானொலியின் நோக்கம் :
மாணவ  பருவத்தில் இருந்து இளமை பருவத்தை அடையும் வளரும் இளம் வயது மாணவர்கள் தங்கள் சுயமதிப்பை உணரவும் , மனித மேம்பாட்டை உணரவும் , சமூகத்தை அறியவும் ,உணர்வுகளை கையாளவும் ,அவர்கள் பாதையை நல்வழி படுத்தவும் புகையிலை ,போதை ,மது ,பாலியல் போன்றவற்றில் இருந்து  அவர்களை காத்து நல்வழி படுத்தவும் துவங்கப்பட்டதே இந்த சமுதாய வானொலி

நிகழ்ச்சி தயாரிப்பு :

பள்ளி தலைமை ஆசிரியர்களை சந்தித்தல்

கலை ஆர்வமுள்ள ஆசிரியர்களை அவரவர்களின் தலைமை ஆசிரியரே தேர்வு செய்தல்

தேர்வான ஆசிரியர்களிடம் இருந்து
நிகழ்சிகளுக்கான கதைகளை அல்லது
வழிமுறைகளை  பெறுதல் மற்றும் வழங்குதல்
(கலந்துரையாடல் )

நிகழ்சிகளை ஒருமனதோடு நிறைவேற்றல்

ஒத்திகை பார்த்தல்

ஒலிப்பதிவு

ஒலிபரப்பு


நிகழ்சிகள் :

நிகழ்சிகள் அனைத்தும் தமிழிலே ஒலிபரப்பபடுகின்றது.பங்குபெருபவர்களின் திறைமைகளை வெளிப்படுத்த வாய்ப்பாக நிகழ்சிகள் அமைகின்றது .சுற்றுசூழல் மாசு ,வாழ்வியல் திறன் ,சமூக முன்னேற்றம் ,சுயமுன்னேற்றம் போன்றவைகளை சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றது
  • பாடல்  (Folk)
  • நாடகம் 
  • பேச்சு 
  • வாதம்
  • போலிக் குரல் (அ) நடித்தல்
  • விதண்டா வாதம் 
  • இசை நிகழ்சிகள் 
  • அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் 
  • கதை கூறல் 
  • உண்மைகள் மற்றும் தகவல்கள் 
  • பப்ளிக்  சர்வீஸ்  அன்னௌன்செமென்ட்  (PSA)
  • குழு விவாதம்
இன்னும் பல சிறந்த முறைகள் மூலமும் நிகழ்தப்படுகின்றது ..
இளந்தளிர் வானொலியில் ஒலிபரப்பாகும் மக்களுக்கு வழங்கப்படும் பயனுள்ள நிகழ்சிகள்
  • இந்திய அரசாங்கம் 
  • தமிழும் தமிழர் பண்பாடும் 
  • நாமும் தேசமும்
  • சிரிக்க சிந்திக்க 
  • இனிய பயணம் 
  • கனவுகள் நிஜமாகும் 
  • திறமைகள் உனக்குள் 
  • கிராமங்களை அறிவோம் 
  • தாய் சேய் நலம் 
  • போன் இன் ப்ரோக்ராம்  
 போன்ற  நிகழ்சிகள் ஒலிபரப்பபடுகின்றது ,
இதில் இனிய பயணம் நிகழ்ச்சி ஒருசில காரணங்களால் தவிர்க்கப்பட்டது
இப்படி ஒட்டுமொத்த அமைப்பையும் அடிப்படையில் இருந்து நான் நன்கு தெளிவாக கற்றேன் .

பிறகு ஸ்டுடியோ சென்று இயந்திரங்களின் அமைப்பை அறிந்தேன்.
 .
20\12\2011
AUDIO வினை EDITING செய்வதற்கு NUENDO -3 SOFTWAR பயன்படுத்தப்படுகின்றது
 நடந்து முடிந்த ரத்ததானம் குறித்த தரவுகளை ஸ்டுடியோவில் மென்பொருளை கொண்டு தொகுப்பாக்கம் செய்யப்பட்டது
அதை கவனித்தேன் பின் சில சந்தேகங்களை கேட்டு விடையரின்தேன்
அதை தொடர்ந்து ஓவிய ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது அதன் தரவுகளையும் தமிழ் நாடு பள்ளி கல்வித்துறை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுர இசை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமின் தரவுகள் உள்ளிட்ட மூன்று நிகழ்சிகளை EDITING செய்வதில் பங்கு கொண்டேன் .

21\12\2011
ALL INDIA RADIO வின் அமைப்பு குறித்தும் அதன் நிகழ்சிகளை குறித்தும் தகவல்களை தெரிந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டு அவ்வாறு செய்தேன் .
PSA-( PUBLIC SERVICE ANNOUNCEMENT) எழுதினேன்
கழிப்பிடம் பயன்படுத்துதல் ,ஆவணம் காத்தல் ,பெண்களின் உடல் ஆரோக்கியம் வேண்டி மமொக்ரம் பரிசோதனை பற்றிய PSA க்களை எழுதினேன்
இறுதியாக கழிப்பிடம் பயன்படுத்துதல் அங்கீகரிக்கப்பட்டது .
22\11\2011
AUDIO SOFTWAR இன்  வகைகள்  மற்றும் அதன் வேறுபாடுகளை  கேட்டறிந்தேன்
  • NUENDO (PRO TOOLS)
  • SOUND FORGE
  • ADOBE AUDUTION 
  • SOUND BOOTH
  • GOLD WAVE
  • PRO TOOLS 
போன்றவைகளையும் இதன் பயன்பாடுகளையும் ,தேவையான சாதனங்களையும் அதன் இணைப்புகளும் அறிந்தேன் (எ-டு) Wired Microphones Wireless Microphones ,Pro Sound Equipment ,Recording Equipment,Audio Accessories
அதன்பின் AUDIO MIXER பற்றி ஆழமாக கேட்டறிந்தேன் . ஒலிபரப்பாகும் அமைப்பை அறிந்தேன்
23\12\2011
DIGITAL BANNER  களை தவிர்ப்போம் என்னும் PSA எழுதினேன் .
அதை தொடர்ந்து நிறுவனத்தின் நூலகம் சென்றேன் , சில நூல்களை வாசித்தேன் .

24\12\2011&25\12\2011 இவ்விரண்டு நாட்களும் வார இறுதிநாட்கள் எனவே விடுமுறை அளிக்கப்பட்டது .

26\12\2011
  • எச்சில் துப்பாதீர்
  • நீர் 
  • உணவு
  • டிராபிக் ரூல்ஸ் 
  • மரம் வளர்ப்போம் 
  • மின்சார சிக்கனம் 
  • மக்கும் மக்கா குப்பைகள் 
  • உலகமயமாக்கல் 
  • பேருந்தின் படியில் பயணம்  
போன்ற தலைப்புகளில் இன்னும் பல PSA க்கள் செய்யலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது
அதைதொடர்ந்து ரத்ததான நிகழ்சிக்கும் தேசிய ஒருமைப்பாடு வாரத்தை வலியுறுத்தியும்  தொகுப்புரை எழுதினேன்
27\12\2011

பஞ்சாயத்து தலைவர்களுக்கு இளந்தளிர் சமுதாய வானொலியை பற்றிய விளக்கஉரை ராஜீவ் காந்தி தேசிய இளைஞ்சர் மேம்பாட்டு நிறுவனத்தில் நடத்தப்பட்டது அதில் பங்கு பெற்றேன் , அதை தொடர்ந்து மாலை ரத்த பரிசோதனைல் துவக்க தொகுப்பிலும் தேசிய ஒருமைப்பாட்டின் தொகுப்பிலும்   சில மாற்றங்கள் செய்யப்பட்டது .

28\12\2011

இன்று நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரி சில அறிவுரைகளை வழங்கினார் . ஏன் நாம் FM என்று அழைக்க காரணம் என்ன ஏன் நாம் அதை பயன் படுத்த வேண்டும் என்னும் சில கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டது ,மென்பொருளை  கற்றுக்கொள்வதை காட்டிலும் முதற்க்கண் கருவிகளின் ஒட்டுமொத்த அமைப்பை நாம் நன்கு அறிய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது .

set up
block diagram
equipment characteristics
types of equipments
போன்ற வைகளை நாம் அறிய வேண்டும் எனவும் .
FM
AM
PM
(SW,MW)
THREE CHARACTERISTICS OF WAVE
FREQUENCY
AMPLITUDE
PHASE
போன்றவைகளை வரைபடங்களுடன் விளக்கப்பட்டது
அதைதொடர்ந்து TRANSMITTER,MODULATION, போன்றவைகளை தொகுதி வரைப்படங்களை கொண்டு விளக்கினார்
அதை தொடர்ந்து நிறுவனம் அறிமுகப்படுத்திய  வாழ்க்கை திறன் குறித்த புத்தகம் வழங்கப்பட்டது
அதில் வாழ்க்கை திறன் என்றால் என்ன திறன்களின் வகை ,அதன் பயன்கள் அதனால் ஏற்படும் நல்வினைகள் போன்ற பல்வேறு கருத்துக்கள் அறிய பயன்பட்டது ,அதை கொண்டு சிறுவர்களுக்கு கதைகள் அமைத்து அதை இயக்கி வானொலியில் ஒலிபரப்பு செய்வதற்கு அறிவுரை வழங்கப்பட்டது

29\12\2011
இன்று வாழ்க்கை திறன்களை அடிப்படையாக கொண்டு எனது கற்பனையால் கதை ஒன்றை வழங்கினேன்
RADIO REPORT  ஒன்றையும் எழுதினேன் .
அதை தொடர்ந்து ஸ்டுடியோவில் நடைபெற்ற ஒலிப்பதிவில் பங்குபெற்றேன்
பின் இளைஞ்சர்களுக்கு செயர்க்கை ஆபரணம் தயாரிக்கும் முறை குறித்து  இலவச பயிற்சி வகுப்பின் அறிமுக தொகுப்புரையை எழுதினேன்
30\12\2011
 PSA -கழிப்பிடம் அமைத்தல் RECORDING
அதை தொடர்ந்து  மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டுதல் என்னும் PSA எழுதினேன்
பின் வேலை வாய்ப்பு பயிற்சி நிறைவு விழாவின் தொகுப்பை நான் மென்பொருள் கொண்டு திருத்தல் செய்தேன்
அதை தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த PSA ஒன்றை எழுதினேன்


31\12\2011&1\1\2012 இவ்விரண்டு நாட்களும் வார இறுதிநாட்கள் எனவே விடுமுறை அளிக்கப்பட்டது .
நிறுவனம் ஏற்ப்பாடு செய்து இருந்த புத்தாண்டு வரவேற்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டேன் அதில் நிறுவனம் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும்  வரும் ஆண்டிற்கான புதிய திட்டங்கள் மற்றும் கால அளவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது . அதில் நிறுவனத்தின் இயக்குனர் தலைமை தாங்க நிறுவனத்தில் இயங்கக்கூடிய அனைத்து தரப்பு ஊழியர்களும் கலந்து கொண்டனர்
அதை தொடர்ந்து
ST'MARYS SCHOOL
இப்பள்ளி மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றை முழுவதுமாக கேட்டேன் , அதில் பெண் சமூகம் , சுயமுன்னேற்றம் , குழந்தை தொழிளாலர்கள் , சுற்றுசூழல் ,காற்று மாசு அடைதல் , அறிவியல் வளர்ச்சி , உலகம் அறிவோம் , கவிதை ,இசை கருவிகள் வாசித்தல் , ஆங்கிலம் பேசலாம் ,விகடன் , விழிப்புணர்சி பாடல் ,, போன்ற பற்ப்பல வகைகளில் ஒரு மணிநேர நிகழ்சியில்  மாணவர்களால் அவர்களது திறைமைகளை வெளிப்படுதும் வகையில் அந்நிகழ்சிகள் அமைந்திருந்தது , அதை முழுவதுமாக கேட்டு தெளிந்து பின்  நான் என் மனதில் தோன்றிய அந்நிகழ்சிகள் பற்றிய நிறைகளையும் குறைகளையும் எனது தனிப்பட்ட கருத்துகளையும் தொகுப்பாக வரைந்து நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் வழங்கினேன்   
3\1\2012
நூலகம் சென்று புத்தகங்களை பயன்படுத்தி கொண்டேன் அதை தொடர்ந்து
ஏன் இந்த வேகம் என்னும் மற்றொரு  PSA வையும் எழுதினேன் .
6\1\2012
சாலைபாது காப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது , அதை வலியுறுத்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு கஜேந்திர குமார் அவர்கள் நிலையம் வருகை தந்தார் , அவரிடம் சாலைபாது காப்பு வாரம் குறித்த சில கேள்விகள் கேட்கப்பட்டது , அன்று நடைபெற்ற ஒலிப்பதிவில் பங்கு பெற்றேன்
அதை தொடர்ந்து அந்நிகழ்ச்சிக்கு தேவையான அறிமுக தொகுப்பினை எழுதினேன் .


7\12\2011&8\1\2012 இவ்விரண்டு நாட்களும் வார இறுதிநாட்கள் எனவே விடுமுறை அளிக்கப்பட்டது .
9\10\2012
இன்று சில தட்டச்சு வேலைகளில் ஈடுபட்டேன் ,
நிறுவனத்தின் கணினி ஆய்வகத்தை பயன்படுத்தி கொண்டேன்
10\12\2012
இன்று சில தட்டச்சு வேலைகளில் ஈடுபட்டேன் ,
நிறுவனத்தின் கணினி ஆய்வகத்தை பயன்படுத்தி கொண்டேன்
சில தொகுப்புகளை மாற்றி அமைத்ததோடு , ஸ்டுடியோ வில் சில தொழில் நுட்ப பணிகளை மேற்கொண்டேன்

12\1\2012
விவேகானந்தர் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞ்சர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது , அதற்கான அறிமுக தொகுப்பை எழுதினேன் ,
அவரது பொன்மொழிகளை ஆராய்ந்தேன் , அதை கொண்டு வலிமையான தொகுப்பை படைத்து அதை ஒலிப்பதிவு செய்தேன் ,.
அதை தொடர்ந்து வேலை வாய்ப்பு செய்திகளின் தொகுப்பை அறிக்கைக்கு ஏற்ப எழுதினேன் , அதை RECORDING செய்தேன் 

13 \1 2012
இன்று போலிவாக்கம் நடுநிலை பள்ளிக்கு சென்றேன் ராஜீவ் காந்தி தேசிய இளைஞ்சர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் இளைஞ்சர் மன்றங்கள் குறித்த கேள்விகளை அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அன்று நடைபெற்ற நேரடி ஒலிபரப்பில் நிறுவனத்தின் பொறுப்பாளரிடம் சில கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டனர் .

14\12\2011& 15\1\2012 இவ்விரண்டு நாட்களும் வார இறுதிநாட்கள் மற்றும் பொங்கல் திருநாள் எனவே விடுமுறை அளிக்கப்பட்டது .

18\1\2012
இன்று நிறுவனத்திற்கு வெளிநாட்டு இந்திய விவகார துறை மத்திய அமைச்சர் வருகை தந்தார் அதற்கான நிகழ்சிகளை நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது , மற்றும் இளைஞ்சர்களுக்கான கருத்தரங்கு ஒன்றையும் ஏற்பாடு செய்து இருந்தது , 
19\12\2012
20\12\2012
போன்ற தினங்களில் மாணவர்களின் நிகழ்சிகள் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன . அதில் பங்கு பெற்றேன்
அதை தொடர்ந்து வானொலியுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்தி கொண்டேன் . இதன் பயனாக என்னை தொடர்ந்து நிகழ்சிகளில் பங்கு கொள்ளுமாறு அறிவுருத்தப்பட்டேன் . 








Comments

Popular posts from this blog

சென்னையில் இப்படி ஒரு மியூசியம் இருப்பது தெரியுமா? #InternationalMuseumDay

3,000 ஆண்டு பழமையான 30 அடி உயர சிலை! எகிப்தை ஆச்சர்யப்படுத்திய அதிசயம்