Posts

Showing posts from 2012

இவனும் ஹிட்லர்

பேருந்து நிருத்தத்தில் அவன் காத்திருந்தான் நுழைவதற்கு இடமில்லாமல் அருகில் வந்து நின்றது ஓர் பேருந்து நேரமில்லை  பொருமையில்லை ஒட்டிக்கொண்டேனும் அதில் தான் செல்வதாக முடிவெடுத்தான் பிடித்து தொங்குவதற்கு ஜன்னல் கம்பிகளை தேடினான் கையிலோ சங்கடமாய் ஹிட்லர் புத்தகம் எவரேனும் உதவினால் சிறுவசதியாயிருக்கும்  அவனுக்கு சுற்றும்முற்றும் பார்த்தான் மேலும் கீழும் பார்த்தான் ஜன்னல் அருகில் இருந்தாள் அந்த பெண்  கம்பின் இடையில்  நீட்டினான் ”இந்த புத்தகத்தை கொஞ்சம் பிடிங்க ப்ளீஸ்”  ஏதோ ஒரு தாயின் கை குழந்தை  அந்த பெண்ணின் மடியில் உறங்குவதை  பாவம்  இவன் அறிந்திருக்க வில்லை அப்பெண்ணோ அதிர்ந்து போனால் .. ஐயோ குழைந்தை !!! ச்ச .. உனக்கு அறிவு இல்லை  குழந்தை இருப்பதை கூடவா பார்க்க மாட்டாய் என்பதான பார்வை அது சட்டென்று நகர்ந்த பேருந்தை ஓடியபடி ஏறினான் அவன்  அவள் ஓரக்கண்ணால் பார்த்தவாறு இருந்தால் இவனின் பார்வைக்கு அவள் ஓர் தாயாகவே தெரிந்தால்  அவளின் மனதிலோ .. இவனும் தான் ஒரு ஹிட்லர்

வேலை வாய்ப்பு பயிற்சி அறிக்கை {INTERNSHIP REPORT}-இளந்தளிர் சமுதாய வானொலி 20-DEC-2011-20-JAN-2012

இளந்தளிர் சமுதாய வானொலி தேர்வு செய்ததற்கான காரணம் : நான் சமூகத்தில் ஒருவன் , இந்த சமூகம் சமூகத்தில் உள்ள மக்களால் ஆனது , ஆக நான் எந்த அளவிற்கு இந்த சமூகத்தில் பங்கு கொள்கிறேன் , இந்த சமூகம் எனக்கு கூறுவது என்ன ?  நான் இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டியது என்ன ? நம் சமூகம் வேண்டுவது எதை ? வேண்டுவது கிடைத்தால் ஏற்படும் மாற்றம் என்ன ? ஏன் மாற்றம் ஏற்பட வேண்டும் ? இவ்வாறான பல புரிதல்களை வேண்டியே இந்த இளந்தளிர் சமுதாய வானொலியை தேர்வு செய்தேன் .. காரணம் ஊடகங்கள் ஒன்றே சமூக நெருக்கம் கொண்டது .. குறிப்பாக 30 வருடங்களுக்கு முன்பு வானொலி மக்களின் வாழ்வை ப்ரதிபளிக்க கூடியதாக இருந்தது ... இன்று ஊடகங்களில் ஏற்பட்ட வினோத புரட்சிகளின் காரணங்களால் பல மாற்றங்களை நாம் சந்தித்து விட்டோம் ... அவ்வாறு ஏற்பட்ட மாற்றங்களினால்  சமுதாயத்தில் முளைத்த நல்வினை தீவினை அனைத்தும் நாம் அறிந்ததே மற்றும் இவ்வானொலியானது மத்திய அரசின் பார்வையில் இயங்கிகொண்டு இருக்கும் வானொலி , அரசு ஒன்றே பாமர மக்களுக்கும் ,வறுமை கோட்டில் வாழ்பவர்களுக்கும் அதிக பிணைப்பு கொண்டதாக இருக்கும் ,இதனோடு சேவை மனப்பான்மையும் உய...