இவனும் ஹிட்லர்

பேருந்து நிருத்தத்தில் அவன் காத்திருந்தான்
நுழைவதற்கு இடமில்லாமல்
அருகில் வந்து நின்றது
ஓர் பேருந்து
நேரமில்லை 
பொருமையில்லை
ஒட்டிக்கொண்டேனும்
அதில் தான் செல்வதாக முடிவெடுத்தான்
பிடித்து தொங்குவதற்கு
ஜன்னல் கம்பிகளை தேடினான்
கையிலோ சங்கடமாய்
ஹிட்லர் புத்தகம்
எவரேனும் உதவினால் சிறுவசதியாயிருக்கும் அவனுக்கு
சுற்றும்முற்றும் பார்த்தான்
மேலும் கீழும் பார்த்தான்
ஜன்னல் அருகில் இருந்தாள்
அந்த பெண் 
கம்பின் இடையில் நீட்டினான்
”இந்த புத்தகத்தை கொஞ்சம் பிடிங்க ப்ளீஸ்” 
ஏதோ ஒரு தாயின் கை குழந்தை 
அந்த பெண்ணின் மடியில் உறங்குவதை 
பாவம் இவன் அறிந்திருக்க வில்லை
அப்பெண்ணோ அதிர்ந்து போனால் ..
ஐயோ குழைந்தை !!! ச்ச ..
உனக்கு அறிவு இல்லை 
குழந்தை இருப்பதை கூடவா பார்க்க மாட்டாய்
என்பதான பார்வை அது
சட்டென்று நகர்ந்த பேருந்தை ஓடியபடி ஏறினான் அவன் 
அவள் ஓரக்கண்ணால் பார்த்தவாறு இருந்தால்
இவனின் பார்வைக்கு அவள் ஓர் தாயாகவே தெரிந்தால் 
அவளின் மனதிலோ .. இவனும் தான் ஒரு ஹிட்லர்

Comments

Popular posts from this blog

வேலை வாய்ப்பு பயிற்சி அறிக்கை {INTERNSHIP REPORT}-இளந்தளிர் சமுதாய வானொலி 20-DEC-2011-20-JAN-2012

சென்னையில் இப்படி ஒரு மியூசியம் இருப்பது தெரியுமா? #InternationalMuseumDay

3,000 ஆண்டு பழமையான 30 அடி உயர சிலை! எகிப்தை ஆச்சர்யப்படுத்திய அதிசயம்