மூன்றாவது தமிழ் இதழியல் பயிலரங்கம் 2014
சென்னைப் பல்கலைக்கழகத்தில் யாழ்ப்பாணப் மாணவர்கள் பங்குபெற்ற முதல் பயிலரங்கத்திற்கும், நடைபெற்றுக் கொண்டு இருக்கும் மூன்றாவது தமிழ் இதழியல் பயிலரங்கத்திற்குமான பண்பாட்டு தொடர்சியை நாம் ஆராய்வது அவசியமாகிறது. தமிழீழ ஊடக மணவர்களும் தமிழ்நாட்டு ஊடக மாணவர்களும் ஒன்று சேர்ந்து கலப்பணியாற்ற வேண்டிய அவசியம் இந்த காலக்கட்டத்தில் ஏன் வருகிறது ? மொழியால் ஒன்றுபட்ட நாம் பண்பாட்டு ரீதியாகவும், மரபு ரீதியாகவும், பூலோகரீதியாகவும் ஒன்றானவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. கடல்நீரால் பிரிந்திருந்தாலூம் மரபு சார்ந்த பண்பாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் இருநாட்டவர்களுக்கிடையில் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் நீரோடு உள்ள ஒரு மண்பாணை இரு துண்டாக உடைந்தால், உடைந்ததில் சில அளவு நீர் வீணாகவோ காணாமலோ நிலத்தில் மறைந்தோ உரைந்தோ போய் இருக்கும். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நிலை என்ன ? அவர்களின் பண்பாடு, கலாச்சாரம் என்னவாகி கொண்டிருக்கிறது? உலகில் ஒரு இனம் எங்கு சென்றாலும் மரபு ரீதியாக பண்பாடு ரீதியாக அவர்களுக்கே உரிய இயல்போடு வாழ வேண்டிய அவசியம் இந்த காலகட்டத்தில் இருக்கிற...