மூன்றாவது தமிழ் இதழியல் பயிலரங்கம் 2014

சென்னைப் பல்கலைக்கழகத்தில் யாழ்ப்பாணப் மாணவர்கள் பங்குபெற்ற முதல் பயிலரங்கத்திற்கும், நடைபெற்றுக் கொண்டு இருக்கும் மூன்றாவது தமிழ் இதழியல் பயிலரங்கத்திற்குமான பண்பாட்டு தொடர்சியை நாம் ஆராய்வது அவசியமாகிறது. 

தமிழீழ ஊடக மணவர்களும் தமிழ்நாட்டு ஊடக மாணவர்களும் ஒன்று சேர்ந்து கலப்பணியாற்ற வேண்டிய அவசியம் இந்த காலக்கட்டத்தில் ஏன் வருகிறது ? 

மொழியால் ஒன்றுபட்ட நாம் பண்பாட்டு ரீதியாகவும், மரபு ரீதியாகவும், பூலோகரீதியாகவும் ஒன்றானவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. கடல்நீரால் பிரிந்திருந்தாலூம் மரபு சார்ந்த பண்பாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் இருநாட்டவர்களுக்கிடையில் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும்  நீரோடு உள்ள ஒரு மண்பாணை இரு துண்டாக உடைந்தால், உடைந்ததில் சில அளவு நீர் வீணாகவோ காணாமலோ நிலத்தில் மறைந்தோ உரைந்தோ போய் இருக்கும். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நிலை என்ன ? அவர்களின் பண்பாடு, கலாச்சாரம் என்னவாகி கொண்டிருக்கிறது? 

உலகில் ஒரு இனம் எங்கு சென்றாலும் மரபு ரீதியாக பண்பாடு ரீதியாக அவர்களுக்கே உரிய இயல்போடு வாழ வேண்டிய அவசியம் இந்த காலகட்டத்தில் இருக்கிறது. அதற்கு தம் மரபை, பண்பாட்டை, மனித பழக்க வழக்கத்தை அறிவது அவசியமாகிறது. இதன் தொடர்ச்சி உலகில் வாழும் பிற இனமக்களை அறிவதும், அவர்களின் வாழ்வுமுறை குறித்து அறிந்து கொள்வதும், இறுதியில் ஒட்டுமொத்த மனித இனத்தின் புரிதலேடு  வாழ்வை கையாள்வதும் அவசியமாகிறது.

சென்னைப் பல்கலைக்கழக ஊடக மாணவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவர்களும் ஒன்றுசேர்வதன் நோக்கம் இவ்வாறு ஒட்டுமொத்த மனித இனத்தின் புரிதலேடு ஊடகத்தை கையாள்வதோடு,  இழந்த, மறைந்த, தொலைந்த, தொலைத்த, அழித்த, தமிழர்களின் மரபுகளை, பண்பாடுகளை, அடையாளங்களை காண்பதற்கும், மீட்டுருவாக்கம் செய்வதற்கும் உதவும் என்னும் புரிதலோடு தொடர்த்து பயணிப்போம்.

2014 அக்டோபர் மாதம் சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் தமிழ் இதழியல் பயிலரங்கம் நமக்கு உணத்துதென்ன? 

வேலு நாச்சியாரை பற்றி இயக்குனர் ஸ்ரீராம் சர்மா அவர்களும், பறையாட்டம் குறித்து கலைஞன் வேணு அவர்களும், பண்பாடு, அடையாளம், அரங்கநாடகம் குறித்து பேராசிரியை மங்கையும் மற்றும் ஜெனி அவர்களும், வீதி நாடகங்களை பற்றி சுரேஷ் மற்றும் ப்ரேம் அவர்களும், கிராமிய பாடல்கள் குறித்து திருமதி ரத்னா அவர்களும், அரங்க பயிர்சியில் தேவானந்த் அவர்களும், ஒளிப்பட பயிர்சி குறித்து ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்களும், திருமண உறவும் வரும் தலைமுறையை குறித்து பூங்குழலி அவர்களும், திரைப்படம் மற்றும் வாழ்வுமுறை குறித்து லெனின் அவர்களும் இந்திய மற்றும் யாழ்பாண மாணவர்களோடு அவரவர்தம் கருத்துக்களை பகிர்வதன் நோக்கம் என்ன? இவர்கள் பகிரும் கருத்துக்களில் உள்ள அடிப்படை என்ன ? கருத்தரங்கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட விருந்தினர்கள் அனைவரும் வெவ்வேறான தலைப்புகள் சார்ந்த கருத்துக்களை முன்வைத்தாலும் இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் களத்தில் சமூகத்தோடும், இந்த சமூகத்தில் வாழும் மக்களோடு  மிக நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என்ற ஒற்றை புள்ளியில் இணைத்துப்பார்க்கலாம். 

உலகில் வாழும் மக்கள் அவரவர்கள் பூலோக அமைப்பு, வாழ்விடம், காலசூழலுக்கேற்ப அவரவர்களின் வாழ்க்கைமுறை அமைந்திருக்கிறது. இந்த வேறுபட்ட வாழ்க்கை முறையை ப்ரதிபளிப்பவையே இனக்குழுக்களும், பூர்வீககுடிகளும். மாறிவரும் சமூக சூழலில் உலகமயமாக்களின் பிடியின் தாக்கத்தில் இந்த தொழில்நுட்ப ஓட்டத்தில், அறிவியல் அசுர வளர்சியில்,  உலகில் எத்த சமூகமாக இருந்தாலும் , அந்த சமூகம் தம் அடையாளங்களை அழித்துக்கொண்டு, அல்லது மாற்றிக்கொண்டு, சமரசம் செய்து கொண்டு பயணிக்கின்றது, இந்த பயணம் எங்கு முடியும் என்றால், எல்லா சமூகமும் அதனதன் மரபுகளை பண்பாடுகளை, நாகரீகத்தை, அடையாளங்களை தொலைத்த பின், அறிவற்ற சமூகமாக, வரலாறு அறியாத சமூகமாக, தாம் அறிந்த ஏதோ ஒன்றை அல்லது பிறர் அரிந்த பண்பாட்டினை, நாகரீகத்தை எந்த ஒரு அடிப்படை கேள்விகள் இன்றி அவைகளை பின்பற்றத் தொடங்குவோம். இதன் விலைவு உலகில் வாழ்ந்த சமூகங்களின் அடையாளங்கள் இயல்பாக அழிக்கப்படும். இவ்வாறான பாரம்பரிய கட்டமைப்புகள் அழிவதற்கு நாம் காரணமாகவோ அல்லது அதை பற்றி கவலை கொள்ளாதவர்களாகவோ இருக்கிறோம் என்பது நாம் மனித இனத்திற்கும், நம் முன்னோர்களுக்கும் இழைக்கும் துரோகம் எனலாம். இதை மீட்டெடுக்க ஒன்றுபட்ட கூட்டு முயற்சி அவசியமாகிரது. இதற்கு போராடும் போராளிகளாக நாம் நம் பயிலரங்க விருந்தினர்களை பார்க்கலாம்.

வேலு நாச்சியாரை பற்றியும் உடையாளை பற்றியும் இயக்குனர் ஸ்ரீராம் சர்மா கூறும்போது, தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து  போராடியவள். உடன்கட்டை ஏறும் காலத்தில் அதை பின்பற்றாமல் கணவனை கொன்றவர்களை பழிவாங்க எட்டு ஆண்டுகள் மறைந்திருந்து போர்தந்திரம் பூண்டு வெற்றிக்கண்டாள். தமக்கு உதவிய உடையாளுக்கு கோவில் அமைத்து வழிபட்டால். பின்நாளில் அந்த பெயரில் மாரியம்மாள் சேர்ந்ததாம். இதை பார்க்கும் போது நம் நாட்டில் உள்ள பல கேவில்களில் பல வகை மாரி தெய்வங்கள் இருக்கின்றன. ஆழ்ந்து பார்த்தால் ஒவ்வொரு மாரி கோவிலிலும் ஒரு வரலாறு மறைக்கப்பட்டோ, புதைந்தோ இருக்கின்றன.

நாட்டில் உள்ள பல பெண்களின் வீரத்தை காட்டிலும் வேலுநாச்சியாரின் வீரத்தில் உள்ள செய்தி என்ன?

இந்த காலக்கட்டத்தில் ஊடக துறையில் செயல்பட போகும் ஒவ்வொரு பெண்ணிற்கும் வேலுநாச்சியார் போல் களத்தில் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. உன்மையை தேடிப்போகும் பெண்களின் பாதுகாப்பிற்கு அவர்களின் மன வளிமையே துணையாகிறது. 22 வயது பெண் புகைப்பட பத்திரிக்கையாளர் மும்பையில் கூட்டாக வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதும், ஊடகத்துறை சார்த்த ஈழப்பெண் இசைப்பிரியாவுக்கு நடந்த நிகழ்வும் சாட்சிகள். உலகில் எந்த பெண்ணும் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது என்றாலும் ஊடகதுறை சார்ந்த பெண்களின் நிலை என்ன? காலநேரம் பொருட்படுத்தாமல் இரவுபகல் பாராமல் களத்தில் செயல்படப் போகும் பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய நிலையை மாற்ற என்ன செய்வது? ஆண்களின் மனதை மாற்றியமைப்பதோடு பெண்களே அவர்களை அவர்கள் பாதுகாதுக்கொள்ளவும், ஆண்களின் மனதில் அச்சத்தை விலைவிக்கவும் வேலுநாச்சியாரி வீரம் ஒவ்வொரு ஊடக துறை சார்ந்த பெண்ணிற்கும் அவசியமான பாடமாகிறது. இங்கு பெண் என்றால் வீரம் நிறைந்தவள் என்பது மரபு , அதுவே நம் சமூகத்தின் பண்பாடு, வரலாறு. இயக்குனர் ஸ்ரீராம் சர்மா கூறுவதில் இருந்து பெண்கள் குறிப்பாக ஊடக துறை சார்ந்த பெண்கள் மனதாலும், உடலாலும் வீரம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் காரணம் பெண்களின் வீரம் என்பது நம் மரபோடும், பண்பாட்டோடும் இனணந்தது என்பதை உணரலாம்.

பறைக் குறித்து கலைஞன் வேணுகோபால் இயல்பாக பகிர்ந்துக் கொள்ளும் போது மா.வோ பற்றி கூறுகிறார். மா.வோ சீனா நாட்டின் போராளி, சீன பண்பாட்டினை மீட்டெடுக்க தம் வாழ்நாளில் பெறும் பகுதியை செலவழித்தார். ஒரு நாட்டில் பண்பாடு சார்த்த இசைக்கலைஞனே அந்த நாட்டின் முதல் போராளி என்று மா.வோ கூறியதை வேணு அவர்கள் சுட்டிக்காட்டினார். இதை நாம் மக்களுக்கு போர் செய்தி அறிவிக்கும் முரசு கொட்டியோடு ஒப்பிடலாம். ஒரு நாட்டின் போர் வீரத்தை அந்த நாட்டின் போர்வாள் உணர்த்தும் முன் அந்த நாட்டின் வீரத்தை பண்பாடு சார்ந்த இசைக்கருவியான முரசே மக்களிடம் தொடர்பு கொள்கிறது. நாட்டின் வீரம் அந்த முரசொலியில் உள்ளது. நாட்டின் வரலாற்றிக்கு அடையாளமாக முரசு உள்ளது. பறையும் முரசும் ஓர் குடும்பத்தார் என்பதை மறுப்பதற்கில்லை..  

மங்கை அவர்களும் ஜெனி அவர்களும் அரங்க நிகழ்வில் மணிப்பூரில் சாமானிய மக்கள் மீது குறிப்பாக  பெண்கள் மீதான இந்திய ராணுவத்தின் அடக்குமுறை, அத்துமீரல், வன்கொடுமைகளை சுட்டிக்காட்டும் விதத்தில் அரங்க நகழ்ச்சி நடத்தப்பட்டது. 

ராணுவத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அதிகாரத்தை கைவிட கோரி பொதுநலன் வேண்டி மணிபூரில் 14 ஆண்டுகளமாக தம் உடலோடு உண்ணா போர் புரியும் இரோம் ஷர்மிலா மீது நம் இந்திய நாட்டிற்கு இருக்கும் அக்கரையினையும் இந்திய அரசு இரோம் ஷர்மிலாவுக்கு வழங்கியிருக்கும் ஜனனாயக சுதந்திரத்தையும் கண்டு நாம் மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்தியது

பாலஸ்தீனத்தில் நடத்தப்பட்ட போர் குற்றங்களையும், ஈழத்தில் நடந்த இன அழிப்பு குறித்தும் ஒப்பிட்டுக்காட்டப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை சுட்டிக்காட்டி ஜெனி அவர்களின் இயல்பான வசன நடிப்பு பாராட்டத்தக்கது. பெண்களை தம் உடலுறவுக்கான கருவியாக பார்க்கும் ஆண்களுக்கு எதிராக உள்ள கோபமாக இந்த அமர்வு இருந்தது. அமர்வில் அடிப்படையாக மனதில் தோன்றியது ஒரு நாட்டில் அரசோ, அதிகாரவர்கமோ ராணுவத்தை எந்த ஒரு கொள்கையின் அடிப்படையில் கொண்டுவந்தாலும் அந்த நாட்டின் ராணுவம் அந்த நாட்டை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அதே நாட்டில் வாழும் மக்களை அதிகாரத்தை கொண்டு அடக்கி ஆள எப்போதும் தயாராகவே உள்ளது. ஒரு சில இடங்களில் ராணுவமானது அதிகார பிடியில் இருந்தும் நழுவி செயல்படும். அப்பாவி ஆண்களை கொன்று புதைக்கவும் , பெண்களை திண்று புதைக்கவும் ராணுவத்திற்கு உரிமையுண்டோபோலும். நாட்டை ஆள்வது அரசா ? ராணுவமா ? என்பது கூட தெரியாமல் அப்பாவிகளாக வாழும் மனிதர்களே உலக அளவில் வாழ்கின்றனர். இதுவும் மரபோ என்று தோன்றுகிறது. மன்னர் படைகளை கொண்டு சொந்த நாட்டு மக்களை அடக்கி ஆள்வதும் . மன்னரை எதிர்த்த தளபதிகளும் வரலாரே.


-தொடரும்


Comments

  1. அருமையான பதிவு மேலும் விடையங்களை எதிர் பார்க்கின்றோம் எங்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்தது ஊடக பயிற்சி மாணவர் என்ற ரீதியில் உங்கள் கருத்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேலை வாய்ப்பு பயிற்சி அறிக்கை {INTERNSHIP REPORT}-இளந்தளிர் சமுதாய வானொலி 20-DEC-2011-20-JAN-2012

சென்னையில் இப்படி ஒரு மியூசியம் இருப்பது தெரியுமா? #InternationalMuseumDay

3,000 ஆண்டு பழமையான 30 அடி உயர சிலை! எகிப்தை ஆச்சர்யப்படுத்திய அதிசயம்