Posts

'மாதங்களும் வாரம் ஆகும்... நானும் நீயும் கூடினால்..!' - ஏன் அப்படி? #TimePsychology

Image
‘காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி’ என்று வைரமுத்து எழுதியதும், ‘மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்’ என்று வாலி எழுதியதும் எதனால்?  ‘ஒவ்வொரு நாளும் போறதே தெரியலை. அதுக்குள்ள ஒரு வருஷம் கடந்துடுச்சா, காலேஜ் முடிச்சு இத்தனை வருஷம் ஓடிப்போச்சா, நேத்துதான் பொறந்தா மாதிரி இருந்த குழந்தைங்க அதுக்குள்ள வளர்ந்துட்டாங்களே, எனக்கு இவ்வளவு வயசாகிடுச்சா...' என நேரமும் காலமும் விரைவாகக் கடந்து செல்வதை உணர்ந்து பிரமிக்கிறீர்களா? ஏன் இப்படித் தோன்றுகிறது? எப்போதும் அதே கடிகாரம், அதே 24 மணி நேரம், அதே 60 விநாடிகள்தான். பிறகு ஏன் இப்படி ஒரு பிரமிப்பு? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள, பல விஞ்ஞானிகள் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், பிரேசில் உடல்நல உளவியலாளர்கள், `மனிதர்கள் எவ்வாறு  `காலம்-நேரம்’ கடப்பதை உணர்கிறார்கள்?' என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அதில் 15 வயதினர் முதல் 89 வயதினர் வரை உள்ள 233 ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும், கண்களை மூடி, 120 விநாடிகளை எண்ணும்படி கூறினர்....

சென்னையில் இப்படி ஒரு மியூசியம் இருப்பது தெரியுமா? #InternationalMuseumDay

Image
ICOM (International Council of Museums) எனும் அமைப்பு, அருங்காட்சியகங்கள் தொடர்பாக ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை அடிப்படையாகக்கொண்டு பல நிகழ்வுகளை நடத்திவருகிறது. உதாரணத்துக்கு அருங்காட்சியக வல்லுநர்களும் பொதுமக்களும் சந்தித்துப் பேசவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்னைகளை மக்களுக்கு விளக்கவும், சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் பல நடவடிக்கைகளை ICOM எடுத்துவருகிறது. இந்தத் தருணத்தில், நீங்கள் சென்னையில் இதுவரை சென்றிடாத ஓர் அருங்காட்சியகத்துக்கு இப்போது செல்வோமா...  சுற்றுலாப் பயணிகளுக்கு, தங்கள் குடும்பத்தினரை மகிழ்விக்கவும் குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் ஏதுவான பல இடங்கள் சென்னையில் இருக்கின்றன. குறிப்பாக  எழும்பூர் அரசு அருங்காட்சியகம், பிர்லா கோளரங்கம், வள்ளுவர் கோட்டம், பாம்புப் பண்ணை, காந்தி மண்டபம், குழந்தைகள் பூங்கா, வண்டலூர் பூங்கா, மெரினா கடற்கரை, முட்டுக்காடு, கோவளம், புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம் மட்டுமல்லாமல், பல தீம் பார்க்குகளும் உள்ளன. ஆனால் ந...

இயற்கை தந்த எல்.ஈ.டி பல்பு... எங்கே போயின மின்மினிப் பூச்சிகள்?

Image
இந்தப் பிரபஞ்சத்தில் இயற்கையாக ஒளிரும் தன்மை கொண்ட உயிரினங்கள் பல இருந்தாலும், நம் கண்களில் தென்படுபவை சில மட்டுமே. உதாரணத்திற்கு ஆழ்கடலின் உள்ளே பல அறிய வகை மீன்கள், ஜெல்லிமீன்கள், நத்தை ஓடுகள், சுறாக்கள், கடல் ஆமைகள் மற்றும் பவளப்பாறைகள் என கடல்வாழ் உயிரினங்கள் இயல்பாக பிரகாசிக்கும் திறனைக் கொண்டிருந்தாலும், அவைகளை நாம் எளிதாக காண்பது அவ்வளவு சுலபமல்ல! பூஞ்சைகளில் சுமார் 71 வகை பூஞ்சைகள் இயல்பாக ஒளிரும் தன்மை கொண்டவை. சூரியன் மற்றும் நிலவின் ஒளியாலும், புற ஊதாக்களின் தாக்கத்தினால், தனித்துவமான இயற்கை சூழலால், உயிரினங்கள் அதனிடத்தே கொண்டுள்ள வேதிய எதிர்வினையால் உயிரினங்களிடம் இருந்து ஒளி-உற்பத்தியோ அல்லது ஒளி-உமிழ்வோ ஏற்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் இயற்கையான ஒளியின் அழகை நாம் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியினை நாம் எதனோடும் ஒப்பிட முடியாது. அப்படி பார்த்தால், நம் வாழ்நாளில் நாம் பார்த்த முதல் ஒளிரும் உயிரினம் எது என்றால்? நிச்சயம் அது மின்மினிப்பூச்சிகளாகத் தான் இருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன்பு கோடைக்கால இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வந்தால், பச்சையும், மஞ்சலும்...

ஐஸ் அசுரர்களின் ரகசிய உலகம்... உலகின் மிகப் பெரிய பனிக் குகை அதிசயம்!

Image
ஐஸ் அசுரர்களின் ரகசிய உலகம்... உலகின் மிகப் பெரிய பனிக் குகை அதிசயம்! ஆண்டு 1930, அந்த மலைத்தொடர் கோடைக்காலத்தில் இருந்து குளிர்காலத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தது. நடுவே இலையுதிர்காலம் வந்து சென்றதால், இலைகள் முழுவதும் உதிர்ந்து மரங்கள் அனைத்தும் களையிழந்து நிற்கிறது. கடுமையான பனிக்காலம் என்பதால், பகல் நேரத்திற்கான அவகாசம் மிகவும் குறைவு. மலையின் பாறைகளும் குகைகளும் நீர்நிலைகளும் பனியால் உறைந்துவிட்டன.  பனி உறைந்த இடம், ஸ்கேட்டிங் நடனப் பயிற்சிக்கு வசதியாக இருக்கும் என்று நம்பிய ஒலிம்பிக் ஜோடி ஒன்று, பல அடிஉயரம் பாறைகள்மீது பயணித்து. குகை ஒன்றின் அருகே, கால்களில் பொருத்தப்பட்ட தகடுகளுடன் சறுக்கு நடனமாடுகிறார்கள். அப்போது எதிர்பாராமல் விபத்து நிகழ்கிறது. உயிர் பிரிந்த நிலையில் அவர்களும் அவ்விடத்தில் உறைந்துவிடுகிறார்கள். அதன் பிறகு சுமார் 8 ஆண்டுகள் அந்தக் குகைப்பகுதிக்குச் செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பின் 1938-ல் பல நிபந்தனைகளுடன் மீண்டும் அந்தக் குகை திறக்கப்பட்டது. ஐரோப்பாவின் ஆஸ்திரியா பகுதியில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் "ஐஸ் அசுரர்களின் உலகம்" ( Wo...

மரங்களின் இடுக்குகளில் முன்னோர்களைப் பாதுகாக்கும் டோராஜாக்கள்..!

Image
மிக நீண்ட கடல் பறப்பில் அது ஒரு குட்டி தீவு, அந்த தீவின் மலைகளில் பல பிரமாண்ட பாறைகள், அந்த பாறைகளில் சதுர வடிவில் பல பொந்துகள். பாறைகளில் மட்டுமல்ல, அங்குள்ள பழமையான மரங்களிலும் இப்படியான பொந்துகள். பறவைகளோ, விலங்குகளோ, மனிதர்களோ எளிதில் நெருங்க முடியாத வகையில், அந்த பொந்துகள் உருவாக்கப்பட என்ன காரணம் தெரியுமா? இந்தோனேஷியா தீவுகளில் ஒன்றான தென் சுலாவெசி மாகாணத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும், டோராஜா இனத்தவர்கள், அவர்கள் இனத்தில் இறந்தவர்களின் உடல்களை இந்த பொந்துகளில் தான் பாதுகாத்து வருகின்றனர். டோராஜா மக்களுக்கும், இந்த பொந்துகளுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. தங்களின் இறப்பிற்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பதை டோராஜா இன மக்கள் உறுதியாக நம்புகின்றனர். எனவே தங்கள் இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால், அவர்களை அடக்கம் செய்வதற்கு, முதலில் பாறைகளை தேர்வு செய்வார்கள். இறந்தவர்களின் உடல் அளவிற்கேற்ப சதுரவடிவில் பாறைகளை துளையிடுவார்கள். பின் இறந்த உடலை துணிகளை கொண்டு முழுவதுமாக சுற்றி, உருவாக்கிய பொந்துகளில் உடலை பாதுகாப்பாக வைப்பார்கள். பெரியவர்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை. இ...

ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள்

Image
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு கருத்தை முன்வைத்திருந்தார், அதாவது, ‘தமிழகத்தில் கற்பிக்கும் தரம் மிகவும் குறைந்துவிட்டது; 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூட தங்கள் பெயரை எழுதத் தெரியவில்லை. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம். கல்வி வியாபாரம் ஆனதுதான் இதற்குக் காரணம்’ என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அனைவருக்கும் கல்வி தரமானதாகவும், கட்டணங்கள் இல்லாமலும், கட்டாயமாகவும் தரப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொன்னாலும், இன்று எதார்த்த நிலைமை வேறு, தனியார் பள்ளிகளில் ஆரம்பப் பள்ளி செலவுகளே பெற்றோர்களை அலறவைக்கின்றன. உங்கள் குழந்தைகளை நீங்கள் ஏன் அரசுப்பள்ளிகளில் சேர்க்கவில்லை என்று கேட்கும் அதே நேரம், அவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என்று யோசிக்கவும் வேண்டும். ஐந்து பாடங்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையிலும் சில அரசுப் பள்ளிகள் இருக்கின்றன! ஒரே வகுப்பில் 50 முதல் 60 வரை மாணவர்கள் இருக்கும் நிலைமையும் உள்ளது. இருப்பினும், அரசு பள்ளிகளையும் மா...

சைக்கிளில் டீ விற்பவர்களுக்காக ஒரு ’வாவ்’ முயற்சி! #Tea2go

Image
 வேலை தேடுபவர்களாக இருந்தாலும், நிறுவனங்களில் பணியில் இருப்பவர்களாக இருந்தாலும், தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை இங்குள்ள பலருக்கும் இருக்கிறது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், சுயத்தொழில் துவங்குவது போன்றதொரு சுலபமான காரியமும் இல்லை, அதை விட ஒரு கடினமான வேலையும் இல்லை. காரணம் இன்றைய சூழலில், தொழிலில் வெற்றி பெறுவதற்கு முதலீடு, ராசி, யோகம் போன்றவைகளை காட்டிலும் தனித்துவமான திட்டங்கள், நுணுக்கமான புதிய யோசனைகள் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. தொழிற்துறை, தொழில்நுட்பம் இரண்டின் போக்கை சற்று ஆழமாக கணித்து, எதிர்கால மாற்றங்களுக்கு தகுந்தவாறு திட்டமிடுவது ஒரு வழி என்றால், பயன்பாட்டில் உள்ள தொழில்களில் புதுமைகளை புகுத்தி, மாற்றங்களை கொண்டு வருவது மற்றொரு வழி. அப்படி பயன்பாட்டில் உள்ள சைக்கிள் டீ விற்பனையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார், சிவராஜ் முத்துராமன். கடந்த சில வருடங்களாக தொழில் துவங்குவதற்கு தேவையான புதிய யோசனைகளை, பலருக்கு வழங்கிவரும் இவர், கடந்த 2012ஆம் ஆண்டில் சுற்றுசூழலுக்கேற்ற எலக்ட்ரிக் ரிக்‌ஷாவை வடிவமைத்திருந்தார். இவர் வடிவமைத்த ரிக்‌ஷா, சர்வதேச அளவில் சிறந...