தீ நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தெரு சிறந்ததா ? ரிச் ஸ்ட்ரீட் சிறந்ததா ?
தீ நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தெரு சிறந்ததா ? ரிச் ஸ்ட்ரீட் சிறந்ததா ? என்னை கேட்டால் வெளிநாடுகளில் இருந்து மின் சாதன பொருட்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு வந்து விற்று கொள்ளை லாபம் அடித்து தன் குடும்பம் மட்டும் வாழ என்னும் அந்த தெருவை காட்டிலும் , கோடி கோடியாக வருவாய் ஈட்டும் தீ நகர் தெருவானாலும் அந்த தெருவை நம்பி ஊரில் இருந்து கிளம்பி வந்த பல ஆண் பெண் குடும்பங்கள் வருவாயுடன் பிழைக்கிறது அதை ஒரு புறம் மனம் ஏற்று கொள்கிறது, அதற்காக தீ நகர் தெருக்கள் நியாயமாகிவிட முடியாது ,, மனிதன் தோன்றிய காலம் முதல் அவன் செய்கிற பிரதான செயல் உழைப்பு, ஒருவர் செய்கிற செயலுக்கும் உழைப்பிருக்கும் பெரும் வித்தியாசங்கள் உண்டு, மனிதன் செய்கின்ற செயலனைத்தும் உழைப்பாக கருதப்படமாட்டாது மாறாக ஒரு செயலை செய்வதன் மூலம் ஒன்றை அவனால் உற்பத்தி செய்ய முடிகிறது என்ற போதுதான் அவை உழைப்பாக கருதப்படுகிறது. அந்த உழைப்பு அவனுக் கு ஊதியம் தருகிறது.அந்த ஊதியம் அவன் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது.தரத்தை உயர்த்துவதோடு தொடர்ந்து உழைப்பதற்கு வழிவகை செய்கிறது. அடிப்படையில் சில கேள்விகள் என் ஆழ் மனதில் உள்ளது இன்றைய காலக்கட்டத்த...