தென் இந்தியாவில் ஊரக மேம்பாடும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பங்களும்

இன்று கிராமபுறங்கள் முற்றிலும் வளர்ச்சி அடைந்து கொண்டுவருகிறது எனவும், நகரங்களோ அயல் நாடுகள் போன்று அடுத்த கட்ட முன்னேற்ற பாதையை எட்டிக்கொண்டு இருக்கின்றது என்பது போன்ற நவீன பிம்பத்தை நம் கண்கள் கண்டு அதை மனதளவில் எற்று கொண்டு வருகிறோம். இங்கு நாம் தெளிவு கொள்ள வேண்டியது, நகரங்களுக்கான சமமுன்னேற்றம் கிராமங்களில் இல்லை என்பதால் கிராமங்களை வளர்ச்சி அடைய செய்ய விழைகிறோம், இதற்கு அரசும், பல அரசு சார் இயக்கங்களும், தனியார் நிறுவனகளும், குழுக்களும் செயல்பட்டு கொண்டு வருகிறது இங்கு வளர்ச்சி எது என்பதை நாம் இவ்விடத்தில் அறிய வேண்டியுள்ளது. ஒரு அரசோ, குழுவோ, இயக்கமோ, அல்லது அந்த பகுதியில் வாழ்கின்ற ஒரு சிலரின் கருத்துக்களோ ஒரு பகுதியில் உள்ள ஒரு ஒட்டுமொத்த கிராமத்தின் வளர்ச்சி ஆகிவிடுமா.?
ஊரக வளர்ச்சிக்காக நவீன கழிப்பிடம் அமைத்து தருகிறோம், தகவல் மையங்கள , இணைய மையங்கள், சுய உதவி குழுக்கள் போன்ற பல வசதிகளை கிராம புறங்களில் வாழும் மக்களும் கற்று பயன் பெறவேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் அவைகளை இயக்குகிறோம் ஆனால் இவை அனைத்தும் சமமான வளர்ச்சியை அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அளிக்கின்றதா?
இங்கு ஒரு குறியை பகிர்ந்து கொள்கிறேன்
தொழில்நுட்பம் Vs அடிப்படை தேவை
அதாவது சாமான்ய மக்களுக்கு இன்று ஒரு மாபெரும் நவீன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறோம், எந்த ஒரு அரசும் குழுவும் இயக்கமும் மக்களின் வாழ்வாதார அடிப்படைகளை வழங்கி இருக்கிறதோ இல்லையோ தொழில்நுட்ப பயன்பாட்டை வழங்கி உள்ளது, இந்த வளர்ச்சி யாருடைய வளர்ச்சி ? செல் போன் வைத்து இருந்ததால் இன்று விவசாயி வளர்ச்சி அடைந்தவரா?ஆனால் இன்று அவைகள் தான் வளர்ச்சியாக விவசாயிக்கு கற்பிக்கப்பட்டுள்ளது
அவர்கள் செய்து வந்த இயற்கை சார்ந்த விவசாயத்தில் இருந்து ஹைப்ரிட் விவசாயத்திற்கு மாறிவிட்டார்கள். இன்று வாழைப்பழம் கத்திரிக்காய் போன்ற பல உணவு பொருட்கள் வினோத வடிவத்தில் உள்ளது, இயற்கை விவசாயம் செய்தால் அவர் ஊடங்கங்களில் இன்று முக்கிய புள்ளி. பூக்களும்,பழங்கலும்,காய்களும்அ ரிசியும் இன்று பரிசோதனை கூடங்களில் வளர்க்கப்படுகிறது அவைகள் நம்மை கொண்டு பரிசோதனை செய்து பார்க்கப்படுகிறது, விளைவு நம் அடுத்த தலைமுறைக்கு தான் தெரியும் .
தென் பகுதிகளில் பயிரிடப்பட்ட பல பாரம்பரிய மிக்க தானியவகைகள், பழ வகைகள , பூ வகைகள், எங்கு சென்றது என்பதே தெரியவில்லை, இன்று விவசாயத்தில் அவருக்கு கற்ப்பிக்கபடும் மந்திரம் "பணப்பயிர்".அரசும் குழுக்களும் இதருக்கு பல வகையில் உதவி புரிந்து வருகிறது. மானாவாரி விவசாயத்தில் இருந்து பணப்பயிருக்கு அவர் ஏன் மாறியாக வேண்டும் ? அதற்கான கட்டாயத்தை நாம் ஏன் ஏற்ப்படுத்தி தந்தோம். முன்பும் கூட பஞ்சங்கள் வந்ததே ஆனால் இயற்கை அழியவில்லை .
மறுசுழற்சி வருகையில் பூமி இயற்கை வளங்களை மீண்டும் புதுப்பித்து கொண்டது ஆனால் நாம் என்ன செய்கிறோம் ? பஞ்சத்தில் சிக்கக்கூடாது என்பதற்காக பல மாற்று வழிகளை சிந்திக்கின்றோம் ஆனால் அவைகள் மூலம் இயற்கையை அழித்துகொண்டே வருகிறோம் என்று தான் எனக்கு தோன்றுகிறது.
இதன் விளைவு உணவை மக்களுக்கு வழங்கிட அதை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் உணவுக்கான மசோதாவை கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். செல்வத்தை பாதுகாத்த காலங்கள் சென்று உணைவை கூட பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை நாம் மறந்துவிட கூடாது .இதுபோக இன்னும் சில விவசாயிகள் சிறிய நிலத்தில் அதிக மகசூல் .ஒரு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கர் நிலத்திற்கு உண்டான மகசூலை பெறலாம் என்கிறார் !! ஏன் அவ்வாறு பெறவேண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கருக்கு உண்டான வளர்ச்சி தானே நியாயமானது ? ஏன் அவர் நிலங்களை சுருக்கு அதிக லாபம் அடைய எண்ணினார் ? எங்கு சென்றது அவர் விவசாய நிலங்கள் ? இது உங்களுக்கு வளர்ச்சியாக பட்டால் இவை அனைத்தையும் நானும் வளர்ச்சியாக ஏற்கிறேன் ஒரு கிராமத்தின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வற்ற சமமான வளர்ச்சியையே வளர்ச்சியாக கொள்ளலாம்.அவ்வாறு சமமான வளர்ச்சி எது என்பதையும் நாம் இங்கு களைய வேண்டிஉள்ளது,முன்பு இருந்த தலைவர்கள் திட்டம் தீட்டி இன்று பல கிராமங்களில் சமமான கல்வியை வழங்கி உள்ளனர் அதை நாம் எவ்வாறு பயன் படுத்துகிறோம் அவை பயனளிக்கின்றதா என்ற விவாதத்திருக்கு நாம் செல்லவேண்டாம் மாறாக அவ்வாறு வழங்கியது வளர்சியில் சம முன்னேற்றம் கொண்ட கிராமங்களாக மாற்றுவதற்கு அது துணை புரிந்ததா என்பதைத்தான் நாம் ஆராய வேண்டும் கல்விக்காகவும், உணவிற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், கலைகளுக்காகவும், பல திட்டங்களை ஊரக மக்களுக்காக வகுக்கப்படுகிறது ஆனால் அவை அனைத்தும் சமதளவில் சமபங்கில் அந்த வளர்ச்சிக்கு இட்டு செல்கிறதா என்பதை தான் நாம் உணரவேண்டும்.
முடிவில்லா வளர்ச்சி வேண்டி முடிக்கிறேன்
இன்று கிராமபுறங்கள் முற்றிலும் வளர்ச்சி அடைந்து கொண்டுவருகிறது எனவும், நகரங்களோ அயல் நாடுகள் போன்று அடுத்த கட்ட முன்னேற்ற பாதையை எட்டிக்கொண்டு இருக்கின்றது என்பது போன்ற நவீன பிம்பத்தை நம் கண்கள் கண்டு அதை மனதளவில் எற்று கொண்டு வருகிறோம். இங்கு நாம் தெளிவு கொள்ள வேண்டியது, நகரங்களுக்கான சமமுன்னேற்றம் கிராமங்களில் இல்லை என்பதால் கிராமங்களை வளர்ச்சி அடைய செய்ய விழைகிறோம், இதற்கு அரசும், பல அரசு சார் இயக்கங்களும், தனியார் நிறுவனகளும், குழுக்களும் செயல்பட்டு கொண்டு வருகிறது இங்கு வளர்ச்சி எது என்பதை நாம் இவ்விடத்தில் அறிய வேண்டியுள்ளது. ஒரு அரசோ, குழுவோ, இயக்கமோ, அல்லது அந்த பகுதியில் வாழ்கின்ற ஒரு சிலரின் கருத்துக்களோ ஒரு பகுதியில் உள்ள ஒரு ஒட்டுமொத்த கிராமத்தின் வளர்ச்சி ஆகிவிடுமா.?
ஊரக வளர்ச்சிக்காக நவீன கழிப்பிடம் அமைத்து தருகிறோம், தகவல் மையங்கள , இணைய மையங்கள், சுய உதவி குழுக்கள் போன்ற பல வசதிகளை கிராம புறங்களில் வாழும் மக்களும் கற்று பயன் பெறவேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் அவைகளை இயக்குகிறோம் ஆனால் இவை அனைத்தும் சமமான வளர்ச்சியை அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அளிக்கின்றதா?
இங்கு ஒரு குறியை பகிர்ந்து கொள்கிறேன்
தொழில்நுட்பம் Vs அடிப்படை தேவை
அதாவது சாமான்ய மக்களுக்கு இன்று ஒரு மாபெரும் நவீன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறோம், எந்த ஒரு அரசும் குழுவும் இயக்கமும் மக்களின் வாழ்வாதார அடிப்படைகளை வழங்கி இருக்கிறதோ இல்லையோ தொழில்நுட்ப பயன்பாட்டை வழங்கி உள்ளது, இந்த வளர்ச்சி யாருடைய வளர்ச்சி ? செல் போன் வைத்து இருந்ததால் இன்று விவசாயி வளர்ச்சி அடைந்தவரா?ஆனால் இன்று அவைகள் தான் வளர்ச்சியாக விவசாயிக்கு கற்பிக்கப்பட்டுள்ளது
அவர்கள் செய்து வந்த இயற்கை சார்ந்த விவசாயத்தில் இருந்து ஹைப்ரிட் விவசாயத்திற்கு மாறிவிட்டார்கள். இன்று வாழைப்பழம் கத்திரிக்காய் போன்ற பல உணவு பொருட்கள் வினோத வடிவத்தில் உள்ளது, இயற்கை விவசாயம் செய்தால் அவர் ஊடங்கங்களில் இன்று முக்கிய புள்ளி. பூக்களும்,பழங்கலும்,காய்களும்அ
தென் பகுதிகளில் பயிரிடப்பட்ட பல பாரம்பரிய மிக்க தானியவகைகள், பழ வகைகள , பூ வகைகள், எங்கு சென்றது என்பதே தெரியவில்லை, இன்று விவசாயத்தில் அவருக்கு கற்ப்பிக்கபடும் மந்திரம் "பணப்பயிர்".அரசும் குழுக்களும் இதருக்கு பல வகையில் உதவி புரிந்து வருகிறது. மானாவாரி விவசாயத்தில் இருந்து பணப்பயிருக்கு அவர் ஏன் மாறியாக வேண்டும் ? அதற்கான கட்டாயத்தை நாம் ஏன் ஏற்ப்படுத்தி தந்தோம். முன்பும் கூட பஞ்சங்கள் வந்ததே ஆனால் இயற்கை அழியவில்லை .
மறுசுழற்சி வருகையில் பூமி இயற்கை வளங்களை மீண்டும் புதுப்பித்து கொண்டது ஆனால் நாம் என்ன செய்கிறோம் ? பஞ்சத்தில் சிக்கக்கூடாது என்பதற்காக பல மாற்று வழிகளை சிந்திக்கின்றோம் ஆனால் அவைகள் மூலம் இயற்கையை அழித்துகொண்டே வருகிறோம் என்று தான் எனக்கு தோன்றுகிறது.
இதன் விளைவு உணவை மக்களுக்கு வழங்கிட அதை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் உணவுக்கான மசோதாவை கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். செல்வத்தை பாதுகாத்த காலங்கள் சென்று உணைவை கூட பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை நாம் மறந்துவிட கூடாது .இதுபோக இன்னும் சில விவசாயிகள் சிறிய நிலத்தில் அதிக மகசூல் .ஒரு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கர் நிலத்திற்கு உண்டான மகசூலை பெறலாம் என்கிறார் !! ஏன் அவ்வாறு பெறவேண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கருக்கு உண்டான வளர்ச்சி தானே நியாயமானது ? ஏன் அவர் நிலங்களை சுருக்கு அதிக லாபம் அடைய எண்ணினார் ? எங்கு சென்றது அவர் விவசாய நிலங்கள் ? இது உங்களுக்கு வளர்ச்சியாக பட்டால் இவை அனைத்தையும் நானும் வளர்ச்சியாக ஏற்கிறேன் ஒரு கிராமத்தின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வற்ற சமமான வளர்ச்சியையே வளர்ச்சியாக கொள்ளலாம்.அவ்வாறு சமமான வளர்ச்சி எது என்பதையும் நாம் இங்கு களைய வேண்டிஉள்ளது,முன்பு இருந்த தலைவர்கள் திட்டம் தீட்டி இன்று பல கிராமங்களில் சமமான கல்வியை வழங்கி உள்ளனர் அதை நாம் எவ்வாறு பயன் படுத்துகிறோம் அவை பயனளிக்கின்றதா என்ற விவாதத்திருக்கு நாம் செல்லவேண்டாம் மாறாக அவ்வாறு வழங்கியது வளர்சியில் சம முன்னேற்றம் கொண்ட கிராமங்களாக மாற்றுவதற்கு அது துணை புரிந்ததா என்பதைத்தான் நாம் ஆராய வேண்டும் கல்விக்காகவும், உணவிற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், கலைகளுக்காகவும், பல திட்டங்களை ஊரக மக்களுக்காக வகுக்கப்படுகிறது ஆனால் அவை அனைத்தும் சமதளவில் சமபங்கில் அந்த வளர்ச்சிக்கு இட்டு செல்கிறதா என்பதை தான் நாம் உணரவேண்டும்.
முடிவில்லா வளர்ச்சி வேண்டி முடிக்கிறேன்
Comments
Post a Comment