Posts

Showing posts from 2014

கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் உண்ணாவிரத போராட்டம்

கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊடக துறையில் பங்கு கொண்டவனாக அந்த போராட்டத்தின் புரிதலை வேண்டி ஒரு பதிவு. கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின்  உண்ணாவிரத போராட்டம்  23/12/2014 அன்று சென்னையில் நடை பெற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்தது இதில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். தலைவர் சகிலன், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், சங்க நிர்வாகிகள் விஷ்ணுராம், தேனி தமிழன், சேலம் தாமோதரன், திருச்சி விஷ்ணுவர்த்தன், நாகை ஆசைத்தம்பி, காஞ்சி கண்ணன், கடலூர் தமிழ், கடலூர் ஆனந்தன், சென்னை வெள்ளைச்சாமி, வெங்கடேஷ், தணிகா, விருதுநகர் சந்திரன், நாமக்கல் முருகேசன், வேலூர் தனவேல், வேலூர் சுரேஷ்  உட்பட பலர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் அதோடு பாண்டிச்சேரி சலீம், லோட்டஸ் டிவி உரிமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆனந்தன் lco (local connection operator ) மற்றும் ஞான முருகன் lco, மூர்த்தி, சங்கர் மற்றும் சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர் அசோசியேசன் தலைவர் கருணாநிதி ஆகியோரின் நேர்காணல் மூர்த்தி : ...

What we expect about media is not actually the only media…

மூன்றாவது தமிழ் இதழியல் பயிலரங்கம் 2014

சென்னைப் பல்கலைக்கழகத்தில் யாழ்ப்பாணப் மாணவர்கள் பங்குபெற்ற முதல் பயிலரங்கத்திற்கும்,  நடைபெற்றுக் கொண்டு இருக்கும் மூன்றாவது தமிழ் இதழியல் பயிலரங்கத்திற்குமான  பண்பாட்டு தொடர்சியை நாம் ஆராய்வது அவசியமாகிறது.  தமிழீழ ஊடக மணவர்களும் தமிழ்நாட்டு ஊடக மாணவர்களும் ஒன்று சேர்ந்து கலப்பணியாற்ற வேண்டிய அவசியம் இந்த காலக்கட்டத்தில் ஏன் வருகிறது ?  மொழியால் ஒன்றுபட்ட நாம் பண்பாட்டு ரீதியாகவும், மரபு ரீதியாகவும், பூலோகரீதியாகவும் ஒன்றானவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. கடல்நீரால் பிரிந்திருந்தாலூம் மரபு சார்ந்த பண்பாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் இருநாட்டவர்களுக்கிடையில் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும்  நீரோடு உள்ள ஒரு மண்பாணை இரு துண்டாக உடைந்தால், உடைந்ததில் சில அளவு நீர் வீணாகவோ காணாமலோ நிலத்தில் மறைந்தோ உரைந்தோ போய் இருக்கும். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நிலை என்ன ? அவர்களின் பண்பாடு, கலாச்சாரம் என்னவாகி கொண்டிருக்கிறது?  உலகில் ஒரு இனம் எங்கு சென்றாலும் மரபு ரீதியாக பண்பாடு ரீதியாக அவர்களுக்கே உரிய இயல்போடு வாழ வேண்டிய அவசியம் இந்த காலகட்டத்தில் இருக்கிற...

தொடர்பியல் பார்வையில் சினிமா துறையில் சினிமாவும், திரைப்படத்திற்கு எதிரான போராட்டங்களும், தணிக்கை துறையும், சமூகத்தில் சாமனியரின் மனநிலையும்.

தொடர்பியல் சார்ந்த பார்வையில் சினிமாவை அணுகுவதற்கு முன், தொடர்பியல் பார்வையை விடுத்து, பொதுவான கண்ணோட்டத்தில் சினிமாவை பார்ப்பதில் உள்ள கோளாறுகளையும், சினிமாவின் தற்போதைய இயல்பினையும், திரைப்படத்திற்கு எதிரான போராட்டங்களையும், தணிக்கை துறையையும், பொது மக்களின் மனநிலையையும் சற்று ஆழ்ந்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். சமூகத்தில் உள்ள பிரச்சனைகளும் சினிமாவும் இன்று சமூகத்தில பல பிரச்சனைகள் போராட்டங்கள் நடக்கின்றன, மது, போதை, கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற பிரச்சனைகளும் தீண்டாமை, பயங்கரவாதம், இடஒதுக்கீடு, மதரீதியான சிக்கல்கள் போன்றவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.   இவை அனனைத்திலும் சினிமாவின் பங்கு என்ன ? நாம் அனைவரும் சினிமா பார்க்கிறோம். நாம் விரும்பும் திரைப்படத்தோடு நம்மை இணைத்துக்கொள்கிறோம். ஒரு திரைப்பட கலைஞர் நினைத்தால் காட்சிகளை கொண்டு திரையின் மூலம் எதனோடும் பார்வையாளனை இணைத்து வைத்திட முடியும். நாம் பார்த்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்த உடன் பிறரோடு பகிர்வதும், கட்டணம் செலுத்தியதால் திரைப்படத்தை விமர்சனம் செய்வதும் பார்வையாளர்களின்...